“நீங்க தான் பூமியைக் காப்பாத்துறீங்க” விஜய்க்கு ஹாலிவுட் நடிகர் புகழாரம்!

“நீங்க தான் பூமியைக் காப்பாத்துறீங்க” விஜய்க்கு ஹாலிவுட் நடிகர் புகழாரம்!

படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது மாஸ்டர் படக்குழு. பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ரசிகர்கள் இல்லாமல் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. 

bigil-audio-launch

மாஸ்டர் படப்பிடிப்பு சில நாட்கள் நெய்வேலி லிக்னைட் சுரங்கத்தில் நடத்தப்பட்டது. அதனால் அந்த பகுதியே சில நாட்களுக்கு திருவிழா கோலம் கொண்டது. விஜயைப் பார்க்க அவரது ரசிகர்கள் திரண்ட வண்ணம் இருந்தனர். 

விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் நெய்வேலி லிக்னைட் சுரங்க வளாகத்தில் மரக்கன்று நட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின. அனைவரும் அவர்களின் இந்த செயலைப் பாராட்டினர். 

vjay-and-lokesh-saplings

இதையடுத்து, ஹாலிவுட் நடிகர் பில் டியூக் விஜயின் இந்த செயலுக்காக அவரைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் “பூமியை காப்பாற்றுகிறீர்கள், வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார். மெர்சல் படத்தின் போதும் இவர் விஜயை பதிவிட்டிருந்தார். பில் டியூக் பிரிடேட்டர் மற்றும் எக்ஸ்மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.