நீங்க இன்னும் வளரணும் தம்பி, வெஸ்ட் இண்டீஸை அடக்கியாண்ட இங்கிலாந்து!

 

நீங்க இன்னும் வளரணும் தம்பி, வெஸ்ட் இண்டீஸை அடக்கியாண்ட இங்கிலாந்து!

உலககோப்பை கிரிக்கெட்டில் புள்ளிகள்பட்டியலில் முதலிடம் வகித்துள்ள மழை அணிக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளதால், இங்கிலாந்து மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய ஆட்டம் ஒருவழியாக முழுமையாக நடந்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி.

உலககோப்பை கிரிக்கெட்டில் புள்ளிகள்பட்டியலில் முதலிடம் வகித்துள்ள மழை அணிக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளதால், இங்கிலாந்து மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய ஆட்டம் ஒருவழியாக முழுமையாக நடந்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்கமே அதிர்ச்சி. நான்காவது ரன்னை எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்த மேற்கிந்திய அணி, கடைசிவரை அதிரடி காட்ட வாய்ப்பே இல்லாமல் 45ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களுக்கு திருப்திபட்டுகொள்ள வேண்டியதாயிற்று. கெய்ல் 36, பூரண் 63, ஹெட்மய்ர் 39 என மூவர் மட்டுமே ஓரளவு கவுரவமான எண்ணை எட்டிப்பிடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், வுட் தலா மூன்று விக்கெட்களையும், ரூட் 2 விக்கெட்களையும், வோக்ஸ் மற்றும் பிளங்க்வுட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Lewis wicket

வெற்றிபெற 350 – 400 ரன்கள் நிர்ணயித்தால்கூட அசால்ட் பண்ணும் இங்கிலாந்து அணி, 213 ரன்களை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்தது. முதல் விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ ரூட் கூட்டணி 95 ரன்கள் எடுத்தது. ரூட் இந்த ஆட்டத்திலும் 100 ரன்கள் எடுத்தார். பேர்ஸ்டோ 45 ரன்களும், வெற்றிக்கோட்டுக்கு அருகே வந்து விக்கெட்டை இழந்த வோக்ஸ் 40 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து அணி 32ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்து 213 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

WI celebrate a wicket

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் கேப்ரியல் இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார். களம்கண்ட நான்கு போட்டிகளில், ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று, இரண்டில் தோல்வியும், முடிவுபெறாத ஒரு ஆட்டத்தையும் ஆடி மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.  சதமடித்து விக்கெட் இழக்காத ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதுபெற்றார்.