நீங்க அதிகமா பெருமூச்சு விடுறீங்களா? அப்போ இதெல்லாம் தான் காரணம்..

 

நீங்க அதிகமா பெருமூச்சு விடுறீங்களா? அப்போ இதெல்லாம் தான் காரணம்..

சிலர் எதுக்கு பெருமூச்சு விடறோம்னு அவுங்களுக்கே தெரியாது,அது ஒரு பழக்கமாகவே மாறி இருக்கும்.எதுக்கெடுத்தாலும் பெருமூச்சு விடாதனு சொல்றத கேட்டு இருப்போம் சரியா,மேலும் பெருமூச்சுகள் பலவிதங்களில் வெளிப்படும் அவை நம் மனதையும் உடல்நிலையையும் பொறுத்தே இருக்கும்.

சிலர் எதுக்கு பெருமூச்சு விடறோம்னு அவுங்களுக்கே தெரியாது,அது ஒரு பழக்கமாகவே மாறி இருக்கும்.எதுக்கெடுத்தாலும் பெருமூச்சு விடாதனு சொல்றத கேட்டு இருப்போம் சரியா,மேலும் பெருமூச்சுகள் பலவிதங்களில் வெளிப்படும் அவை நம் மனதையும் உடல்நிலையையும் பொறுத்தே இருக்கும்.

சிலருக்கு ஏதாவது பெரிய விஷயத்தை செஞ்சு முடிச்சதும்  பெருமூச்சு விடுவாங்க… அது அவர்களின் மனநிலையை பொறுத்து வெளிப்படும். சிலர் எரிச்சல் கோபம்,பயம்,சோர்வு,நிம்மதியற்ற  சூழல்களில்  பெருமூச்சு விடுவர். இது ஒரு உடலின் மொழியாகவே கருதப்படுகிறது. அதன் அர்த்தங்களும் வெவ்வேறாக மாறுபாடும். 

berth

உண்மையில் பெருமூச்சு விடுவதன் காரணங்கள் சில இருக்கின்றன. நீங்கள் ஒவ்வொருமுறையும் பெருமூச்சு விடும்போது உங்கள் உடல் உதவிக்காக ஏங்குகிறது  என்று மருத்துவம் கூறுகிறது. பெருமூச்சு விடுவது சாதாரணம் தான் ஆனால் அதுவே அதிகப்படியாக மாறிவிட்டால்? இது கொஞ்சம் சிக்கல் தான் மக்களே! 

அறிவியலின் படி, ஒரு சராசரி மனிதன் ஒரு மணி நேரத்தில் 12 முறை  நீண்ட  பெருமூச்சுகள் விடுகிறான். அதாவது சுமார் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பெருமூச்சு. இப்போ இதை படிக்கிற நீங்ககூட பெருமூச்சு விடறீங்க! வழக்கத்தைவிட பெருமூச்சு அதிகமாக இருந்தால், நீங்கள் ஏதாவது ரியாக்ட் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.இது ஒரு சராசரியான அடிப்படை சுவாச பிரச்சனையையாக கூட இருக்கலாம். 

copd

நீங்கள் உடலளவிலும்,மனதளவிலும் பாதிக்கப்பட்டு சோர்வாகி இருந்தால் அதிக பெருமூச்சு உங்களுக்கு  ஏற்படலாம், இவை அதிகரிக்கப்பட்ட இதய துடிப்பு, வியர்த்துப்போதல், செரிமான கோளாறுகள் ஆகியவைகளால் ஏற்படும். மேலும் சிலருக்கு அதிகப்படியான ஸ்ட்ரெஸ்,பயம்,மனதில் கலக்கங்கள்,ஆகியவை மற்றும் ஸ்வாச கோளாறுகள் இருந்தாலும் பெருமூச்சு ஏற்படும், ஆஸ்துமா,சரியான காற்றோட்டமின்மை,COPD என்று சொல்லப்படும் கிரோனிக் அப்ஸ்ட்ரக்ட்டிவ் பல்மோனரி டிசீஸ் என்னும் நோய் காரணமாகவும் இருக்கலாம்.

ஆதலால்,பெருமூச்சில் காரணங்கள் இவ்வாறு பல்வேரு விதங்களில் இருக்கின்றன.நீங்கள் அளவுக்கதிகமாக பெருமூச்சு எடுக்குறீர்களானால் உடனே உங்கள் மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம்.