நீங்கள் 11ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவர்களா? அரசின் அதிரடி சலுகை இதோ!

 

நீங்கள்  11ஆம் வகுப்பு படிப்பை பாதியில் விட்டவர்களா? அரசின் அதிரடி சலுகை இதோ!

குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வையும் சேர்த்து ஏற்கனவே படித்த பள்ளியிலேயே எழுதலாம் என்று  அறிவித்துள்ளது. 

அரசுப்பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் முழுமையாகப் பள்ளிப் படிப்பை தொடர்வது இல்லை. சிலர்  9 ஆம் வகுப்போடும். சிலர் 11 ஆம் வகுப்போடும் தங்கள் பள்ளி படிப்பை ஏதோ  ஒரு காரணத்திற்காகக்  கைவிடுகின்றனர். 

இந்நிலையில்  2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் பெற்று பாதியில் படிப்பை விட்ட மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 

ttn

அதாவது  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, இடையில் படிப்பை விட்டு சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்  12 ஆம் வகுப்பு தேர்வையும், ஒருவேளை 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாமல் இருந்திருந்தால் தோல்வி அடைந்த அந்த குறிப்பிட்ட பாடங்களுக்கான தேர்வையும் சேர்த்து ஏற்கனவே படித்த பள்ளியிலேயே எழுதலாம் என்று  அறிவித்துள்ளது. 

ttn

இதை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தாங்கள்  படித்த பள்ளியிலேயே அதை விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.  இந்த செய்தி உண்மையில் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.