நீங்கள் தீர்மானம் கொண்டு வருவீர்கள்.. நாங்கள் அதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமா?.. முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி!

 

நீங்கள் தீர்மானம் கொண்டு வருவீர்கள்.. நாங்கள் அதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமா?.. முதல்வருக்கு துரைமுருகன் பதிலடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதில், திமுக துணைத் தலைவர் துரைமுருகன், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து சட்டப் பேரவையின் கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய துரைமுருகன், வேதாந்தா உள்ளிட்ட எந்த நிறுவனமும் வேளாண் நிலங்களில் எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். 

ttn

துரைமுருகனுக்குப் பதில் அளித்த முதல்வர், வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் வேளாண் நிறுவனத்தில் எதுவும் செய்யக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.அதற்கு துரைமுருகன், ‘நீங்கள் தீர்மானம் கொண்டு வருவீர்கள்.. நாங்கள் அதை நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமா?.. என்று முதல்வருக்குப் பதிலடி கொடுத்தார். வேளாண் நிலங்கள் தொடர்பாக திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.