நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா..? பிரேமலதா- ராமதாஸால் ஏகப்பட்ட டென்ஷனில் எடப்பாடி..!

 

நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா..? பிரேமலதா- ராமதாஸால் ஏகப்பட்ட டென்ஷனில் எடப்பாடி..!

எலிக்கும், பூனைக்குமான பகையை பாஜக சமரசப்படுத்த முயன்றால் அது நடக்குமா? இல்லை நாய் வாலைத்தான் நிமிர்த்த முடியுமா..? ஒரே அணியில் அங்கம் வகித்த தேமுதிக – பாமகவுக்கு இடையேயான பகை மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது.

எலிக்கும், பூனைக்குமான பகையை பாஜக சமரசப்படுத்த முயன்றால் அது நடக்குமா? இல்லை நாய் வாலைத்தான் நிமிர்த்த முடியுமா..? ஒரே அணியில் அங்கம் வகித்த தேமுதிக – பாமகவுக்கு இடையேயான பகை மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. Premalatha

பா.ஜ., தலைமையில், 2014ல், உருவாக்கப்பட்ட  மக்களவை தேர்தல் கூட்டணியில், முதல் முறையாக, பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் கூட்டு சேர்ந்தன. அப்போதே பாமகவினர் ஓட்டு போடாததால், தேமுதிக படுதோல்வி அடைந்ததாக கூறப்பட்டது.

சமீபத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் அந்த இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தன.  பாமகவுக்கு 7 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டதால், தேமுதிக கடும் அதிரும்ப்தி அடைந்தது. இதனால் தங்களுக்கு 8 தொகுதிகளுக்கு மேல் கேட்டு கூட்டணி அமைப்பஹில் தாமபதப்படுத்தி வந்தது.

anbumani

திண்டிவனம், தைலாபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு வரும்படி, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு, ராமதாஸ் அழைப்பும் விடுத்தார். இதனால், இரண்டு கட்சியினரும், சமரசம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில், இரண்டு கட்சிகளும் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளன. தர்மபுரி தொகுதியில் அன்புமணியும், கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷும் தோல்வி அடைந்ததை, இரண்டு கட்சியினராலும் ஜீரணிக்க முடியவில்லை.edappadi

இரு தொகுதிகளிலும், இரணு கட்சியினரும்  உள்ளடி வேலை பார்த்ததால், தோல்வி ஏற்பட்டதாக, இரண்டு கட்சியினரும் பேச துவங்கி உள்ளனர். இது தொடர்பான மோதல் சமூகவலைதளங்களில் அதிகரித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில், கூட்டணியை தொடர, இரண்டு கட்சியினரும் முடிவெடுத்துள்ளனர். அதேநேரம், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சமூகவலைதளங்களில் மோதிக்கொள்வது, இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.