நீங்கதான் சேலஞ்ச் பண்ணுவீங்களா? எங்ககிட்டயும் சேலை இருக்கு! நாங்களும் கட்டுவோம்!

 

நீங்கதான் சேலஞ்ச் பண்ணுவீங்களா? எங்ககிட்டயும் சேலை இருக்கு! நாங்களும் கட்டுவோம்!

பொதுமக்கள் மட்டுமின்றி கட்சி வேறுபாடின்றி அரசியல் பிரமுகர்களும் இந்த ட்ரெண்டிங்கில் பங்களிப்பை அளித்துள்ளனர். காங்கிரஸின் பிரியங்கா காந்தி, நடிகை நக்மா, பாஜகவை சேர்ந்த நுபூர் சர்மா, சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பதிவிட்டுள்ள புகைப்படமும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கீகீ சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் என வகைவகையாக சேலஞ்ச்களை ஆரம்பித்து பொழுதை கழித்துவந்தனர் வெளிநாட்டினர். நம்ம ஊரில் ஆரம்பிக்கப்பட்ட எந்த சேலஞ்ச்சும் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை சேவ் நேசமணி சேலஞ்ச்சைத் தவிர. வடநாட்டிலிருந்து விரைவில் கவ் மூத்ரா சேலஞ்ச் ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சரி, எதற்காக எதிர்மறையாக யோசிக்க வேண்டும்? நேர்மறையாகவே சிந்திக்க நினைத்தால், ஏதும் நல்லது நடந்தால்தானே என நினைத்துக்கொண்டிருக்கும்போதே, வந்துவிட்டது #sareewitter சேலஞ்ச்.

Nivetha Thomas #sareewitter

இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான பெண்களின் முதன்மை விருப்பம் புடவைகள்தான். இதனையே ட்ரெண்டாக்கிவிட்டனர் பெண்மணிகள். ட்விட்டரில் திங்கட்கிழமை தொடங்கிய இந்த #sareewitter ஹேஷ்டேக் தொடர்ந்து 3 நாட்களாக டிரெண்டிங்கில் உள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி கட்சி வேறுபாடின்றி அரசியல் பிரமுகர்களும் இந்த ட்ரெண்டிங்கில் பங்களிப்பை அளித்துள்ளனர். காங்கிரஸின் பிரியங்கா காந்தி,  நடிகை நக்மா, பாஜகவை சேர்ந்த நுபூர் சர்மா, சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் பதிவிட்டுள்ள புகைப்படமும் வரவேற்பை பெற்றுள்ளது.

Nagma #sareewitter

அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், அதிகாரிகளும் குறிப்பாக கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபாவும்  புடவை அணிந்து தனது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல சிறுமிகள், இளம்பெண்கள் என  ஏராளமானோர் புடவை அணிந்தவாறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.  இப்படி #SAREETWITTER ஹேஷ்டாக் வெளிநாட்டு பெண்களையும் விட்டு வைக்கவில்லை. கண்கவர் புடவைகளுடன் வெளிநாட்டு பெண்கள் பதிவிட்ட புகைப்படங்கள் ஏராளமானோரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நமது கலாச்சாரம் வெளிநாடு வரை சென்று பிரபலமானதை, ஏராளமான இந்தியர்கள் சிலாகித்து வருகின்றனர்.