நிவாரண விமானத்தில தப்பி செல்ல முயற்சி…. பிடிபட்ட 8 மலேசியர்கள்…. தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்களா?

 

நிவாரண விமானத்தில தப்பி செல்ல முயற்சி…. பிடிபட்ட 8 மலேசியர்கள்…. தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்களா?

நிவாரண விமானத்தில் தப்பி செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்து பிடிப்பட்ட 8 மலேசியர்களும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றவர்களாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் தப்லீக் ஜமாஅத் நடத்திய மத மாநாட்டில் சுமார் 2 ஆயிரம் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மலேசியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தேடி கண்டுபிடித்து கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

பரிசோதனைக்காக அழைத்து செல்லப்படுபவர்கள்

மேலும் இந்த தப்லீக் ஜமாஅத் நடத்திய மாநாட்டில் விதிமுறைகளுக்கு புறம்பாக சுற்றுலா விசாவில் இங்கு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களுக்கு மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மலேசியாவுக்கு செல்லும் நிவாரண விமானத்தில் அந்நாட்டுக்கு தப்பி செல்வதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்த 8 மலேசியர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர்.

டெல்லி விமா நிலையம்

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், தற்போது பிடிப்பட்டுள்ள 8 மலேசியர்களும் டெல்லியில் வெவ்வேறு பகுதிகளில் மறைந்து இருந்து உள்ளனர். நிவாரண விமானமான மலின்டோ ஏர்வேஸ் விமானத்தில் ஏறி மலேசியாவுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையத்தில் கூடி உள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்ற சந்தேகம் நிலவுகிறது. தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்த பிறகு டெல்லி போலீஸ் மற்றும் சுகதாதார துறையிடம அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்தன.