நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக பரவிய வதந்தி.. 1000க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு!

 

நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக பரவிய வதந்தி.. 1000க்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் மையப்பகுதியான சிவன் கோயில் பகுதியில் நிவாரண பொருட்கள் தரப்படுவதாக வதந்தி பரவியுள்ளது. 

ttn

இதனையடுத்து அங்கு பெரியவர்கள், சிறியவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று நிவாரண பொருட்கள் பொருட்கள் வழங்குவதாக தகவல் வெளியாவது வதந்தி என்றும் ஊரடங்கில் இவ்வாறு கூட்டம் கூட கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனால், மக்கள் அதனை கேட்காமல் அங்கேயே இருந்துள்ளனர். அதனால் போலீசார் ஒலிபெருக்கி மூலம், நிவாரண பொருட்கள் தருவதாக இருந்தால் வீட்டுக்கே வந்து கொடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.