நிவாரண நிதியை பெற கூடும் கூட்டம்… கனிமொழி கவலை!

 

நிவாரண நிதியை பெற கூடும் கூட்டம்… கனிமொழி கவலை!

தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி மற்றும் பொருட்கள் இன்று முதல் ரேஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்க மிகப் பெரும் அளவில் மக்கள் ரேஷன் கடைகளில் கூடி வருகின்றனர். கொரோனா தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ள நிலையில் இப்படி கூட்டம் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிவாரண நிதி பெற ரேஷன் கடைகளில் அதிக அளவில் மக்கள் கூடுவது கவலையை அளிப்பதாக தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உதவி மற்றும் பொருட்கள் இன்று முதல் ரேஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்க மிகப் பெரும் அளவில் மக்கள் ரேஷன் கடைகளில் கூடி வருகின்றனர். கொரோனா தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் என்ற நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ள நிலையில் இப்படி கூட்டம் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இப்படி கூடுவதைத் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

1000-rs-relief-fund

இந்த நிலையில் இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய கவலையை தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தமிழக அரசின் நிவாரண நிதியைப் பெற நியாயவிலைக்கடைகளில் மக்கள் அதிகளவில் கூட்டமாக கூடுவது, மிகுந்த கவலை அளிக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க தனித்திருத்தலையும், சமூக விலகலையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.மக்களும், அரசும் அந்த பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.