நிவாரணம்தானே கேட்டேன் அதுக்கு ஏன் இப்டி துரத்துறிங்க… கதறும் இளைஞர் தற்கொலை முயற்சி: பதற வைக்கும் வீடியோ

 

நிவாரணம்தானே கேட்டேன் அதுக்கு ஏன் இப்டி துரத்துறிங்க… கதறும் இளைஞர் தற்கொலை முயற்சி: பதற வைக்கும் வீடியோ

கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டு போராடியதால் காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகள் போட்டு வருவதாக கூறி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தும் வீடியோ அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

நாகை: கஜா புயலுக்கு நிவாரணம் கேட்டு போராடியதால் காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகள் போட்டு வருவதாக கூறி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் விஷம் அருந்தும் வீடியோ அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சூறையாடி இருக்கிறது. இதனால் அம்மாவட்டங்களின் வாழ்வாதாரம் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஒரு தலைமுறையின் உழைப்பு வீணாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அரசு தரப்பிலிருந்து நிவாரண பணிகள் ஒழுங்காக சென்று சேரவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

gaja

இதற்கிடையே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முதல்வர் பழனிசாமி தாமதமாக பார்வையிட சென்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. மேலும் சிறிது நாட்களுக்கு பிறகு கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட சென்ற முதல்வர் முதற்கட்டமாக புதுக்கோட்டை, தஞ்சாவூரை மட்டும் பார்வையிட்டுவிட்டு நாகை, திருவாரூரை அதற்கு பிறகு பார்வையிட்டார். இதனால் மக்கள் கொந்தளிப்பில் இருந்தனர்

அந்த வகையில் நாகையை சேர்ந்த இளைஞர் ஒருவர், கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி பார்வையிட வராதது குறித்து முதல்வரை விமர்சித்து செய்தியாளர்களிடம் ஆதங்கமாக பேசியிருந்தார்.

nabagi

இந்நிலையில், அந்த இளைஞர் விஷம் அருந்தி விடீயோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்த அந்த இளைஞர் தான் வெளியிட்டிருக்கும் வீடியோவில், கஜா புயலுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என போராடி நீதி பெற முடிவு செய்தோம். நான் ஒரு ஜர்னலிஸ்ட் பட்டம் பெற்ற மாணவன். ஆனால் கஜா புயல் நிவாரணத்துக்கு போராடியதால் காவல்துறையினர் என் மீது தொடர்ந்து வழக்குகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒரு மாதமாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறேன். இதற்கு மேலும் என்னால் வாழ முடியாது. என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு. என்னுடைய சாவுக்கு காரணம் யார் என்று எல்லாருக்கும் தெரியும். என்னால் எங்கள் ஊருக்கு நல்லது நடந்தா சரி என உருக்கமாக பேசி விஷம் அருந்துகிறார். இந்த வீடியோ அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

nga visham

நியாயமான நிவாரணத்திற்காக போராடிய ஒரு இளைஞரை தற்கொலை வரை கொண்டு சென்றது இந்த அரசும், காவல்துறையும்தான். அவர்களது இந்த செயல் நிச்சயம் மன்னிக்க முடியாதது எனவும் இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி என்ன பதிலளிக்க போகிறார் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

palani

மேலும், அரசையும், முதல்வரையும் விமர்சிக்க இங்கு அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால் முதல்வரை விமர்சித்ததற்காக ஒருவரை தற்கொலை வரை அரசு தள்ளியிருப்பதன் மூலம், தன்னை யாருமே விமர்சனம் செய்யக்கூடாது என முதல்வர் பழனிசாமி நினைக்கிறாரோ? அப்படி நினைத்தால் அது சர்வாதிகார போக்கு இல்லையா? எனவும் சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.