நிலா தேய்ந்துவிட்டது… கவலையில் விஞ்ஞானிகள்!

நிலா தேய்ந்துவிட்டது… கவலையில் விஞ்ஞானிகள்!

சந்திரனின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சந்திரனின் உட்பகுதி அதிக குளிர்ச்சி அடைவதால் அதின் நிலப்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு சுருக்கங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அனுப்பிய நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் செயற்கைக் கோள்கள் பூமிக்கு அனுப்பிள்ள படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நிலவில் சுருக்கங்கள் ஏற்படுவதை கண்டுள்ளனர். 

Moon

நாசாவின் செயற்கைக்கோள்கள் இதுவரை அனுப்பியுள்ள 3,500 க்கு மேற்ப்பட்ட படங்களில் நிலாவின் நிலப்பரப்பு மேற்பகுதியில் மடிப்பு மடிப்பாக சுருக்கங்கள் இருப்பதைக் காண முடிகிறது. இவை நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கங்களால் ஏற்பட்டவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். 

நிலப்பரப்பின் உட்பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு குளிர்ச்சி அதிகமாகி வருகிறது. இதனால் நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதோடு மேல்பகுதியில் மடிப்பு போன்ற அமைப்பு ஏற்படுகிறது. இதனை திராட்சைப் பழம் உலர்ந்து சுருங்குவதோடு ஒப்பிடலாம். நிலவில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கங்கள் 5 ரிக்டர் அளவில் இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.