நிலாவுக்கு ரோபோட்டை அனுப்புகிறது ரஷ்யா! பாட்டியை கேட்டதா சொல்லிடுப்பா!

 

நிலாவுக்கு ரோபோட்டை அனுப்புகிறது ரஷ்யா! பாட்டியை கேட்டதா சொல்லிடுப்பா!

ரிமோட் ஆப்ரேட்டர் ஒருவரின் அசைவுக்கு ஏற்ப, தனது கைகளை அசைத்து, கருவிகளை இயக்குவதற்கான பயிற்சியை ஃபெடார் பெற்றுவருகிறது. உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்யவும், தனக்குத்தானே சார்ஜ் போட்டுக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்யவும் பயிற்சி பெற்றிருக்கிறது ஃபெடார்.

ரஷ்யா விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ், செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய Skybot F-850 ரோபோவை ‘ஃபெடார்’ (Fedor) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. ரிமோட் ஆப்ரேட்டர் ஒருவரின் அசைவுக்கு ஏற்ப, தனது கைகளை அசைத்து, கருவிகளை இயக்குவதற்கான பயிற்சியை ஃபெடார் பெற்றுவருகிறது. உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்யவும், தனக்குத்தானே சார்ஜ் போட்டுக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்யவும் பயிற்சி  பெற்றிருக்கிறது ஃபெடார். 

Fedor getting trained

எல்லாம் சரி, இதைவைத்து ரஷ்யா என்ன செய்யப்போகிறது? ஆகஸ்ட் 22ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஃபெடார் அனுப்பி வைக்கப்படவுள்ளது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ரிஸ்க் எடுப்பதற்குப் பதிலாக, ரோபோக்களை அனுப்பி நிலவை ஆய்வு செய்யும் வகையில்தான் இந்த ஃபெடார் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் சர்வதேச விண்வெளிப் பயணம், அதன்பின் நிலாவைத் தேடி ஃபெடார் பயணம் செய்யவிருக்கிறது. நிலாவுக்குப் போனா வடை சுடுற பாட்டியை கேட்டதாச் சொல்லிடு ஃபெடார்!