நிலவுக்கு செல்லும் வியோ மித்ரா ரோபோ! இஸ்ரோவின் புதுமுயற்சி…

நிலவுக்கு செல்லும் வியோ மித்ரா ரோபோ! இஸ்ரோவின் புதுமுயற்சி…

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதற்காக விமானப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு இந்த மாத இறுதியில் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முன் ரோபோ ஒன்றை அனுப்பி ஒத்திகை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. 

இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ள ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதற்காக விமானப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு இந்த மாத இறுதியில் பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது. மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முன் ரோபோ ஒன்றை அனுப்பி ஒத்திகை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. 

அதன்படி  வியோ மித்ரா எனும் பெண் ரோபோவை முன்னோட்டமாக விண்ணுக்கு செல்லவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விண்ணுக்கு செல்லவுள்ள ரோபோவையும் பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிமுகம் செய்து வைத்தார்.  இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணுக்குள் பறக்கவுள்ள வியோ மித்ரா ரோபோ மனிதர்களுடன் உரையாடும் திறன் படைத்தது. மேலும் விண்வெளி வீரர்களுடனான கேள்விகளுக்கு பதிலளிக்கும். விண்வெளிக்கு சென்று என்னமாதிரியான சூழல் உள்ளது என்பதை இங்கிருக்கும் ஆய்வாளர்களுகு உடனுக்குடன் தெரிவுப்படும் திறன் கொண்டது. வியோ என்பதற்கு விண்வெளி என்றும், மித்ரா என்பதற்கு தோழி என்றும் சமஸ்கிருதத்தில் பொருளாம். 

Vyommitra

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த இஸ்ரோ தலைவர் சிவன், மனிதனை போன்று பண்பு கொண்ட ஹியூமனாய்டு வகை ரோபோவான வியோ மித்ராவையும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.