‘நிலவில் நீரை கண்டுபிடித்தால் எங்களிடம் சொல்லுங்கள்’ : குடிநீர் வாரியத்தின் ஜாலி பதிவு!

 

‘நிலவில் நீரை கண்டுபிடித்தால் எங்களிடம் சொல்லுங்கள்’ : குடிநீர் வாரியத்தின் ஜாலி பதிவு!

நிலவில் நீங்கள் தண்ணீரைக் கண்டுபிடித்தால், முதலில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரோவிடம் சென்னை குடிநீர் வாரியம் நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டுள்ளது,

சென்னை : நிலவில் நீங்கள் தண்ணீரைக் கண்டுபிடித்தால், முதலில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரோவிடம் சென்னை குடிநீர் வாரியம் நகைச்சுவையாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

chandrayan 2

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ 978 கோடி ரூபாய் செலவில் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்யச் சந்திரயான்-2 என்ற விண்கலத்தை உருவாக்கியது. சந்திரயான்-2 விண்கலமானது orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்டது. இந்த விண்கலம் நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது.வெற்றிகரமாக சந்திராயன் -2 விண்கலம் ஏவப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்படும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவத்திற்குப் பிரதமர், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். 

 

இந்நிலையில் இதுகுறித்து  சென்னை குடிநீர் வாரியம்  தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நாங்கள் புதிய நீர்நிலைகளை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை நிலவில் நீங்கள் தண்ணீரைக் கண்டுபிடித்தால், முதலில் யாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று தெரியும் தானே?’ என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளனர்.

 

சென்னை குடிநீர் வாரியத்தின் இந்த ட்வீட்க்கு, உங்கள் நகைச்சுவை திறன் அருமை என்று சிலரும், முதலில் நீர்நிலைகளைச் சுத்தம் செய்யும் வேலைகளைப் போய்  பாருங்கள் என்று சிலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.