நிலவில் நடப்பதற்கு பயிற்சி எடுக்கும் பெங்களூரு மக்கள்! மரண கலாய் வீடியோ!

நிலவில் நடப்பதற்கு பயிற்சி எடுக்கும் பெங்களூரு மக்கள்! மரண கலாய் வீடியோ!

பெங்களூருவில் உள்ள துங்கா நகர் பிரதான சாலை ஒரே நாளில் உலக மக்களிடையே பரவலாக சென்று சேர்ந்துள்ளது. குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பெங்களூரு துங்கா நகர் பிரதான சாலையின் அவல நிலையை எடுத்துச் சொல்வதற்காக கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஓவியர் படால் நஞ்சுண்டசாமி வித்தியாசமான முயற்சியைக் கையாண்டுள்ளார். 

bengaluru

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள துங்கா நகர் பிரதான சாலையில், பள்ளம் மேடாக காட்சியளிக்கும் சாலைகளின் நிலையை எடுத்துக்காட்டு விதமாக, ஒருவர் விண்வெளி வீரர் போல வேடமணிந்து நடந்து சென்ற காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  அப்படி அவர் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

அந்த நபர் விண்வெளி வீரர் போல உடையணிந்து தலைகவசம் அணிந்து அந்த சாலையில் நடந்துச் செல்கிறார்.  இந்த சாலையில் நமது விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் நிலையில், 2022-ஆம் ஆண்டில் நிலவில் தரையிரங்கும் நமது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற ரீதியில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.