நிலவின் முதல் புகைப்படத்தை அனுப்பி சாதனைப்படைத்த சந்திரயான் 2 விண்கலம்!

 

நிலவின் முதல் புகைப்படத்தை அனுப்பி சாதனைப்படைத்த சந்திரயான் 2 விண்கலம்!

முழுவதும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 

நிலவின் முதல் புகைப்படத்தை அனுப்பி சாதனைப்படைத்த சந்திரயான் 2 விண்கலம்!

முழுவதும் இந்தியத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008ம் ஆண்டு நிலவை ஆய்வு செய்வதற்கு சந்திரயான்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் நடத்திய சோதனையில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்ட முயற்சியாக சந்திராயன் 2 வை செயல்படுத்தும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கியது. அதன்படி உருவாக்கப்பட்ட சந்திராயன் 2 வரும் ஜூலை மாதம் 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

சந்திராயன் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய அதிநவீன சாதனங்கள் உள்ளது. இதில் உள்ள ஆர்பிட்டர் விண்கலத்தின் சுற்றுபாதையை மாற்றியமைக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் லேண்டர் மூலம் விண்கலம் நிலவில் இறங்கி, ரோவர் மூலம் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த மூன்று அதிநவீன சாதனங்களிலும் 14 வகையான தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சுமார் 800 கோடி செலவில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 46 நாட்களுக்குள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும், தொடர்ந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தரையிறங்கும் விண்கலம், ரோவர் மூலம் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என்றும் குறிப்பிட்டனர். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் அடுத்த 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சுமார் 2650 கி,மீ உயரத்திலிருந்து நிலவை புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 பூமிக்கு அனுப்பியுள்ளது இந்த புகைப்படத்தை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.