நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் சந்திரயான்-2

 

நிலவின் தென் துருவத்தில் தரை  இறங்கும் சந்திரயான்-2

நிலவின் தென் துருவத்தில் தரை  இறங்கும் சந்திரயான்-2 விண்கலம், அதனை பிரதமர் மோடி நேரலையாக காண இருக்கிறார். 

நிலவின் தென் துருவத்தில் தரை  இறங்கும் சந்திரயன் 2 விண்கலம், அதனை பிரதமர் மோடி நேரலையாக காண இருக்கிறார். 

சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சந்திரயான் விண்கலத்தின், ‘விக்ரம்’ தரையிறங்கும் கலன் சுற்றுவட்டக் கலனிலிருந்து கடந்த 2ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதனையடுத்து சந்திரயான் 2, நாளை அதிகாலை 1.30 மணியிலிருந்து, 2.30 மணிக்குள் தரையிறங்க உள்ளது.

இந்த காட்சியை பிரதமர் மோடி நேரலையாக காண இருக்கிறார், அவருடன்  இணைந்து 70 மாணவர்கள் விண்வெளி ஏஜென்சியின் கட்டுப்பாட்டு அறையின் மூலம் சந்திராயன் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவதை காண இருக்கிறன்றனர்.