நிலநடுக்கமே வந்தாலும் முல்லைப் பெரியாறு அணை பாதிப்படையாது : அமைச்சர் கஜேந்திர செகாவத்

 

நிலநடுக்கமே வந்தாலும் முல்லைப் பெரியாறு அணை பாதிப்படையாது : அமைச்சர் கஜேந்திர செகாவத்

கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி. இந்த அணைக்காகக் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி. இந்த அணைக்காகக் கேரளாவுக்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அணையின் முழு கொள்ளளவை நீட்டிக்கத் தமிழக அரசு முயற்சி செய்தும், அணை பாதுகாப்பாக இல்லை என்று கூறி கேரள அரசு 136 அடி தான் அதிகபட்சம் என்று சட்டம் இயற்றி அந்த அளவையே அணையின் கொள்ளளவாக வைத்து வருகிறது. 

dam

 

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த மக்களவையில் கேரளா, இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்குப் பதில் அளித்த  ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது. நிலநடுக்கமே வந்தாலும் அந்த அணைக்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கஜேந்திர செகாவத்

இந்த அணை குறித்து நீண்ட காலமாகத் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வரும் இந்நிலையில், அணை பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனைக் காரணமாக வைத்து அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் படி கேரள அரசைத் தமிழக அரசு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.