நிலத்தடி நீரை உறிஞ்சும் தண்ணீர் சப்ளையர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம்!

 

நிலத்தடி நீரை உறிஞ்சும் தண்ணீர் சப்ளையர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் உயர்நீதிமன்றம்!

கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறையை சாக்காக வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்வ‌தை நீதிமன்றம் ஏற்கப்போவதில்லை எனவும் நீதிபதிகள் கடுமை காட்டியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தமிழகம் முழுக்க பொருந்தும் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அனுமதியின்றி நிலத்தடி நீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிலங்களில் அனுமதியின்றி  போர்வெல் அமைத்து நிலத்தை நீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடுக்கப்பட்ட‌ பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத், மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Water Suppliers

நிலத்தடி நீர் விற்பனை தொடர்பாக இதுநாள்வரை பெறப்பட்ட புகார்களின் பட்டியலையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு உபயோகம் தவிர, பிற பயன்களுக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிய அனுமதி பெறவேண்டும் என்பதை உறுதிசெய்ய உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறையை சாக்காக வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்வ‌தை நீதிமன்றம் ஏற்கப்போவதில்லை எனவும் நீதிபதிகள் கடுமை காட்டியுள்ளனர்.  நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தமிழகம் முழுக்க பொருந்தும் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.