நிலக்கரியை எரிக்காமல் மின்சாரம்…137 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தின் சாதனை

நிலக்கரியை எரிக்காமல் மின்சாரம்…137 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தின் சாதனை

லண்டன் நகரும் நமது டெல்லியை போல பல சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறது.விக்டோரியா ராணி காலத்திலிதுந்து,அதாவது 1882ல் இருந்தே நிலக்கரியைத்தான் எரிசக்திக்கு பயன்படுத்தி வந்தது பிரிட்டன்.

லண்டன் நகரும் நமது டெல்லியை போல பல சுற்றுச்சூழல் சிக்கல்களை சந்தித்து வருகிறது.விக்டோரியா ராணி காலத்திலிதுந்து,அதாவது 1882ல் இருந்தே நிலக்கரியைத்தான் எரிசக்திக்கு பயன்படுத்தி வந்தது பிரிட்டன்.

coal

கடந்த மே ஒன்றாம் தேதி பிற்பகல் 1.24 மணிக்கு நிலக்கரியால் இயங்கும் கடைசி ஜெனரேட்டரை ஆஃப்.செய்துவிட்டது அந்த நாடு. தொழிற்புரட்சி நடந்த இரண்டாவது ஆண்டில் ஹால்பர்னில் நிலக்கரியை பயன் படுத்தி மின்னுற்பத்தி செய்ய துவங்கிய பிரிட்டன் இப்போதுதான் அதை நிறுத்தியிருக்கிறது. 

ஆனாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. வரும் 2025-க்குள் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் நிறுத்திவிடுவோம் என்று.அறிவித்திருக்கிறார்கள்.இங்கிலாந்தின் பிஸ்னஸ் செகரடரியான கிரெக் கிளார்க் ‘கார்பன் கழிவை வெளியிடாத உலகின் முன்னனி பொருளாதார சக்தியாக இங்கிலாந்து புதிய பாதையில் முதலடி வைக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். 

coal

ஆனால்,சூரிய மின்சக்தி,காற்றாலை மின்னுற்பத்தி சாதனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாட் வரியை குறைக்காமல் அரசு 2025-ல் ‘நோ கார்பன்’ இலக்கை அடைய முடியாது என்றும் பத்திரிகைகள் எழுதி இருக்கின்றன.

உலகலவில் அதிகம் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா,சீனா,இந்தியா,ரஷ்யா,ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த பாதைக்குத் திரும்புவது இந்த நூற்றாண்டுக்குள் நடக்கும் என்பதே சந்தேகமாக இருக்கும் நிலையில் இங்கிலாந்தின் இந்த முனெடுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான்!