நிறைவேறியது போக்சோ சட்டம் – குழந்தைகளுக்கு தீங்கிழைத்தால் மரணம் உறுதி!

 

நிறைவேறியது போக்சோ சட்டம் – குழந்தைகளுக்கு தீங்கிழைத்தால் மரணம் உறுதி!

சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செலுத்துவோருக்கான சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்தார். விவாதத்தில் 28 எம்பிக்கள் பங்கேற்றுப் பேசினர். கட்சிப் பாகுபாடின்றி இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்த சட்டத்திருத்தங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். சிறார்களுக்கு ஆசை காட்டியோ அல்லது வன்முறையைப் பயன்படுத்தியோ பாலியல் இச்சைக்கு உடன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.

Child abuse enacts POCSO

சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தினாலோ, சிறுவர்களின் ஆபாச படங்களை விநியோகித்தாலோ வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பரப்பினாலோ 5 முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் வன்முறை செலுத்துவோருக்கான சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம். சிறார்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்க ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.