‘நிறைய முடி.. அழுக்கு சட்டை’ பரிதாப நிலையிலிருந்து மீட்கப்பட்டார் உதவி இயக்குநர்.. பள்ளி நண்பரால் மாறிய வாழ்க்கை!

 

‘நிறைய முடி.. அழுக்கு சட்டை’ பரிதாப நிலையிலிருந்து மீட்கப்பட்டார் உதவி இயக்குநர்.. பள்ளி நண்பரால் மாறிய வாழ்க்கை!

சினிமாவையே கனவாகக் கொண்டு நுழையும் பலரின் வாழ்க்கை கேள்வி குறியாகவே மாறி விடுகிறது. அதே போலத் தான் உதவி இயக்குநர் சுதாகரின் கதையும்.

சினிமாவையே கனவாகக் கொண்டு நுழையும் பலரின் வாழ்க்கை கேள்வி குறியாகவே மாறி விடுகிறது. அதே போலத் தான் உதவி இயக்குநர் சுதாகரின் கதையும். சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் அழுக்கு ஆடை உடுத்திக் கொண்டு, கையில் வெள்ளை பேப்பருடன் நிறைய முடி வளர்த்துக் கொண்டு கனவைத் தொலைத்துவிட்டு இருந்த உதவி இயக்குநர் சுதாகரை பற்றி உதவி இயக்குநர் பிரியன் மரியா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ttn

அதில், சுதாகர் 2001 ல் வெளியான “ பார்வை ஒன்றே போதும் ” என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதாகவும் அவரை அந்த நிலைமையிலிருந்து மீட்க உங்களது உதவியை நாடுகிறோம் என்றும் சுதாகரின் உறவினர்கள் யாருக்காவது இந்த தகவல் தெரிய வந்து அவர் மீட்கபட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ttn

கடந்த 25 ஆம் தேதி பிரியன் மரியா இந்த பதிவை வெளியிட்டிருந்த நிலையில், உதவி இயக்குநர் சுதாகரின் நிலை சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அதன் மூலம், சுதாகரை மீட்பதற்காக அவரது பள்ளி கால நண்பர் திரு.வேல்முருகன் நேற்று மாலை 7 மணிக்கு வந்திருக்கிறார். 

ttn

வேல்முருகன் சுமார் 5 மணி நேரம் சுதாகரிடம் பேசிய பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, அவருக்கு மொட்டை அடித்து சுத்தம் செய்து மீண்டும் பழைய படி ஆக்கியுள்ளார். இதனை பாக்ய ராஜ் என்பவர் அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நமது உதவி இயக்குநருக்கு உதவிய அவருடைய நண்பருக்கு மிகப்பெரிய நன்றிகள். மீட்கப்பட்டு விட்டார் அவரது பள்ளி தோழர் திரு.வேல்முருகன் அவர்கள் நேற்று மாலை ஏழு மணிக்குத் துவங்கிய கடும் போராட்டம் நள்ளிரவு 12 மணிக்கு அவரை மீட்டு தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார்…இப்படி ஒரு உதவி இயக்குநருக்கு யாரோ ஒருவர் துணையுடன் நின்றாள் அதுவே அவர்களுடைய மனநிலையிலிருந்து விடுவிக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.