நிறைமாத கர்ப்பிணியை பிரசாவத்திற்கு செல்லவிடாமல் தடுத்த போலீஸ்: கண்ணீர் மல்க போராட்டம்!

 

நிறைமாத கர்ப்பிணியை பிரசாவத்திற்கு செல்லவிடாமல் தடுத்த போலீஸ்: கண்ணீர் மல்க போராட்டம்!

இதனால்  மக்கள்  தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம்  என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 

பிரசவத்திற்காக சென்ற நிறைமாத கர்ப்பிணியின் ஆட்டோவை வழிமறித்து போலீசார் தடுத்தி நிறுத்திய சம்பவம் போடியில் அரங்கேறியுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால்  மக்கள்  தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம்  என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். 

tt

இந்நிலையில் போடியில் கார்த்திகா என்ற பெண்  பிரசவத்திற்காக ஆட்டோவில் தனது தாயுடன் சென்றுள்ளார். அப்போது நகர காவல்துறை ஆய்வாளர் ஷாஜகான் மற்றும் சார்பு ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் இணைந்து ஆட்டோவை வழிமறித்து சிகிச்சைக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி பெண்ணை பிரசவத்திற்கு செல்லவிடாமல் அலைக்கழித்ததுடன்,  தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கர்ப்பிணி பெண் சென்ற ஆட்டோவையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. 

hh

 போடி நகர காவல்துறையினர் நடவடிக்கையில்  மனமுடைந்த கர்ப்பிணிப்பெண் கார்த்திகா மற்றும் அவரது தாயார் போடி நகர காவல் நிலையம் முன்பாக தனக்கு நியாயம் வழங்க கோரியும் தன்னை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசி சிகிச்சைக்கு செல்லவிடாமல் அலைக்கழிப்பு செய்த போடி நகர சார்பு ஆய்வாளர் கதிரேசன் மீது கடுமையான நடவடிக்கை கோரி காவல் நிலையத்தின் முன்பு கண்ணீருடன்  முற்றுகை போராட்டம் செய்தனர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.