நிறைமாத கர்ப்பிணியுடன் தமிழகத்துக்கு நடந்தே வரும் நபர்..சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்குமாறு கோரிக்கை!

 

நிறைமாத கர்ப்பிணியுடன் தமிழகத்துக்கு நடந்தே வரும் நபர்..சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தாக்குதலால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள நபர்கள், சொந்த ஊருக்கு நடந்த வண்ணமே வந்து சேருகின்றனர். அதே போல 36 வயது இளைஞர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி மற்றும் 2 வயது குழந்தையுடன் நடந்தே வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை பற்றி பேசிய அவர், தன் பெயர் செல்வம் என்றும் மனைவி பெயர் மதிவதனி என்றும் ஆந்திராவில் வேலை பார்த்து வந்த நிலையில், ஊரடங்கால் வருமானம் இல்லை. அதனால் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று நடந்தே தமிழகம் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 

ttn

அவரின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இருக்கும் வெள்ளாளபட்டி என்றும் விவசாயம் இல்லாததால் தான் ஆந்திராவுக்கு சென்றதாகவும், இப்போது தமிழகத்துக்கே திரும்பி சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், கர்ப்பிணி மனைவியுடன் நடந்தே செல்வதால், ஊருக்கு செல்ல உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.