நிறுவன வரி குறைப்பால் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் லாபம்தான்

 

நிறுவன வரி குறைப்பால் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல வாடிக்கையாளர்களுக்கும் லாபம்தான்

நிறுவன வரி குறைப்பால் பொருட்களின் விலை அதிகபட்சம் 5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக முன்னணி தொழில்நிறுவனத்தின் தலைவர்கள் கூறினர்.

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமையன்று உள்நாட்டு நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 25.12 சதவீதமாக (செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்பட) குறைத்தது. வரி குறைப்பால் தொழில்துறையில் முதலீடு அதிகரிக்கும் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்ற கணக்கில் மத்திய அரசு இந்த நடடிவக்கையை மேற்கொண்டது. மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சியால் நிறுவனங்கள் சந்தோஷம் அடைந்தன. மேலும் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன.

மும்பையில் நேற்று இந்தியா டூடே சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பிரபல நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசுகையில், நிறுவன வரி குறைப்பை வரவேற்றனர். அதேசமயம் இதனை முன்கூட்டியே மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றும் கருத்து கூறினர்.

ஆர்.சி.பார்கவா

மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி. பார்கவா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவான் கோயங்கோ ஆகியோர் இது தொடர்பாக கூறுகையில், வரி குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதேசமயம் பலன் பெரிதாக இருக்காது. ஏற்கனவே வாகன நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கி விட்டன அதனால் பெரிய அளவில் சலுகைகள் வழங்க வாய்ப்பில்லை.

பவன் கோயங்கா

நிறுவன வரி குறைப்பின் பலனை 100 சதவீதம் வழங்கினால் கூட பொருட்களின் விலை அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே குறையும். ஓலா மற்றும் உபேர் போன்றவற்றுக்கு மாறியதால் பயணிகள் வாகனங்கள் விற்பனை பாதிக்கவில்லை எனவும் கூறினர்