நிறுத்தப்படுகிறது பிக்பாஸ்… செக்ஸ் புகாரால் அதிர்ச்சி..!

 

நிறுத்தப்படுகிறது பிக்பாஸ்… செக்ஸ் புகாரால் அதிர்ச்சி..!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழும் சர்ச்சைகளும் கொஞ்சநஞ்சமில்லை.

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எழும் சர்ச்சைகளும் கொஞ்சநஞ்சமில்லை.  தற்போது நடைபெற்று வரும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளர்களை களம் இறக்க உள்ள நிலையில், தெலுங்குப் பிக் பாஸ் பேட் பாஸாகி இருக்கிறது. Biggboss

நாகர்ஜுனா தொகுத்து வழங்க இருக்கும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் செக்ஸ் டீல் பேசியதாக பிரபல விஜே பரபரப்பு புகார் கூறினார். அடுத்து நடிகை ஒருவரும் பிக் பாஸ் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்புக்கு முன்னரே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

biggboss

இந்நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 யின் படப்பிடிப்பை நிறுத்துமாறு அதை தொகுத்து வழங்க இருக்கும் நாகர்ஜூனா கேட்டுக் கொண்டாராம். நிகழ்ச்சி குறித்து எழுந்துள்ள நெகடிவ் பேச்சுகள் அடங்கிய பிறகு படபிடிப்பை தொடராலம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். இதனால், போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்கள் கவலை அடைந்து வருகிறார்கள்.

biggboss
 
ஆனால், நாகர்ஜுனாவின் வேண்டுகோளை சேனல் தரப்பு ஏற்றுக்கொண்டதா அல்லது மறுப்பு தெரிவித்ததா? என  இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. அதே சமயம், ஸ்பான்ஸ்கர்ளிடம் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதால், நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் ஒளிபரப்பு செய்வதில் மட்டும் சேனல் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.