நிர்வாணமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ஒரு மணிநேரத்திற்கு 8 ஆயிரம் சம்பளம்!

 

நிர்வாணமாக வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு ஒரு மணிநேரத்திற்கு 8 ஆயிரம் சம்பளம்!

மேலாடைக்கு 85   டாலர் அல்லது உள்ளாடைகளுடன் பணிசெய்ய  75  டாலர் என சம்பளமாக பெறுகிறார். 

35 வயதான கிளாரி ஓ கானர் என்ற பெண் சமீபத்தில்  பேண்டஸி க்ளீன் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.  இதன் மூலம் அவர் வீடுகளை சுத்தம் செய்யும் பணியை செய்துவருகிறார். ஆனால் இந்த பணியை செய்யும் போது அவர் நிர்வாணமாக வேலை செய்கிறார். ஒரு மணிநேரத்திற்கு  முழு நிர்வாணமாகச் சுத்தம் செய்ய 95 டாலர் , மேலாடைக்கு 85   டாலர் அல்லது உள்ளாடைகளுடன் பணிசெய்ய  75  டாலர் என சம்பளமாக பெறுகிறார். 

ttn

இதுகுறித்து  கிளாரி, நான் ஹோட்டல் ஒன்றில் பணிசெய்து வந்தேன். அப்போது இதை ஒரு பெண் செய்து வருவதாக கேள்விப்பட்டேன். ஸ்ரீ வித்தியாசமாக இருக்கும் என நானும் அதை செய்ய  தொடங்கினேன். இது யாராவது ஒருவருக்கு மகிழ்ச்சியை தரும் என நம்புகிறேன்.  நான் ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் அல்ல. இதை முதல் தடவை பார்க்கும் போது  மோசமாக உணரலாம். ஆனால்  வாடிக்கையாளரைப் புரிந்து கொண்டால் நம் 
 கஷ்டங்கள் குறையும். வாடிக்கையாளரின் உள்புறம் வீட்டை மட்டுமே சுத்தம் செய்ய முடியும். வெளிப்படையாக வெளியே செல்ல முடியாது. இதில் யாரும் நம்மை தொடவோ, வேறுமாதிரி நடந்துகொள்ளவோ மாட்டார்கள். உங்கள் வேலையைச் செய்து விட்டு வெளியேறலாம். நான் முன்கூட்டியே  சம்மந்தப்பட்ட வாடிக்கையாளரைக்  கண்காணிக்கத் தொடங்கிவிடுவேன்.

ttn

இதை நான் என்  39 வயதான  கணவர் ராபிடம் இந்த யோசனையைப் பற்றி  சொன்னபோது, ​​இது ஒரு வேடிக்கையான விஷயம் என்று  நினைத்தார். ஆனால் இதை பற்றி முழுதாக தெரிந்துகொண்ட பின் இதை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார். நான் எப்படிப்பட்ட நபர் என்று அவருக்குத் தெரியும்’ என்று கூறி வியப்பை ஏற்படுத்துகிறார்.