நிர்வாணமாக நின்ற பெண்கள் -ஒளிந்து பார்த்த கண்கள் -சோதனை பெயரில் நடந்த வேதனை …

 

நிர்வாணமாக நின்ற பெண்கள் -ஒளிந்து பார்த்த கண்கள் -சோதனை பெயரில் நடந்த வேதனை …

சூரத்தில்  நகராட்சியால் இயக்கப்படும் சிம்மர் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற பெண் ஊழியர்கள் வியாழக்கிழமை மணிக்கணக்கில் துணி இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பெண் மருத்துவர்கள் கர்ப்பம் தொடர்பான சோதனைகளை நடத்தியதுடன் தனிப்பட்ட அந்தரங்க  கேள்விகளையும் கேட்டனர்.

சூரத்தின் சிம்மர் மருத்துவமனையில் தற்காலிக பெண் ஊழியர்கள் உடற்தகுதி  சோதனை என்ற பெயரில் உடைகளை அகற்றி பல மணிநேரம் நிர்வாணமாக நிற்க வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது . 
சில நாட்களுக்கு முன்பு கட்ச்மா வட்டத்தின் பூஜில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் கல்லூரியின் 68 மாணவிகள்   அவர்களுக்கு மாதவிடாய்  இருக்கிறதா என்று சோதிக்கபட்டனர்.

surat-municipal-corporation

இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் கொந்தளித்தது . இந்த சம்பவத்திற்குப் பிறகு, சூரத்தில்  நகராட்சியால் இயக்கப்படும் சிம்மர் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற பெண் ஊழியர்கள் வியாழக்கிழமை மணிக்கணக்கில் துணி இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு பெண் மருத்துவர்கள் கர்ப்பம் தொடர்பான சோதனைகளை நடத்தியதுடன் தனிப்பட்ட அந்தரங்க  கேள்விகளையும் கேட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.எம்.சி ஊழியர் சங்கத் தலைவர் சார்பில் சூரத் மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனையில் பெண் ஊழியர்கள்  சுமார் 10 பேர் கொண்ட குழுவிற்கு முன்  அழைத்துச் செல்லப்பட்டு நிர்வாணமாக ஒன்றாக எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த அறையில் உள்ள வாயிலும் சரியாக மூடப்படவில்லை, ஒரே  ஒரு திரை மட்டுமே இருந்ததால் ,வெளியேயிருந்து பார்த்தால் தெரிய வாய்ப்புள்ளது . அப்போது டாக்டர்கள் அங்கு இருந்த திருமணமாகாத பெண்களிடம்  எப்போதாவது கர்ப்பமாகி இருக்கிறீர்களா  என்று கேட்டனர். சில பெண்கள்  மருத்துவ பரிசோதனைகள் என்ற பெயரில்  துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர்கள் மீது குற்றம் சாட்டினர். இதுபற்றி  தொழிற்சங்கத்தின் புகாருக்குப் பிறகு, இது குறித்து விசாரிக்க நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.