நிர்வாகியை மாற்ற எதிர்ப்பு – லோடுமேன் சங்கத்தினர் வேலைநிறுத்தம்

 

நிர்வாகியை மாற்ற எதிர்ப்பு – லோடுமேன் சங்கத்தினர் வேலைநிறுத்தம்

திண்டுக்கல்

திண்டுக்கல் தரகுமண்டி வர்த்தகர் சங்க வெங்காய மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தரகுமண்டி வர்த்தகர் சங்க வெங்காய மார்க்கெட்டில் லோடுமேன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக தோமையார் இருந்து வருகிறார். தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு குறித்து, கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, கடை உரிமையாளர்கள் சிலருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிர்வாகியை மாற்ற எதிர்ப்பு – லோடுமேன் சங்கத்தினர் வேலைநிறுத்தம்

இதனால், தரகுமண்டி கடை உரிமையாளர் சங்கம் சார்பில் செயலாளர் தோமையாரை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லோடுமேன் சங்கம் சார்பில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மார்க்கெட்டிற்கு வரக்கூடிய வெங்காய மூட்டைகளை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வெங்காய விற்பனையும் பாதிக்கப்பட்டது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, கடை உரிமையாளர்கள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.