நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்; கிரண் பேடி அதிகாரத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்; கிரண் பேடி அதிகாரத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுநர் கேட்டுப் பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முதல்வருடன் கலந்தோசிக்காமல் ஆளுநர் கிரண் பேடி தனியாக செயல்படுகிறார் என்பன உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றி வலம் வருகின்றன.

kiranbedi

இதனிடையே, அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுநர் கேட்டுப் பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த போது, அவருக்கு ஆதரவாக ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரம், அரிதிலும் அரிதான விஷயங்களில் மட்டுமே ஆளுநர் அறிக்கை பெற முடியும். அன்றாட செயல்பாடுகளில் அறிக்கை கேட்டால் நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும் என வாதிட்டார்.

high court

இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், கிரண்பேடிக்கு அதிகாரம் வழங்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால், அரசின் அன்றாடம் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கிரண்பேடி கேட்டுப் பெற முடியாது.