நிர்மலாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஆளுநர் விளக்கம்

 

நிர்மலாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஆளுநர் விளக்கம்

சென்னை: நிர்மலா தேவியுடனான தொடர்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என பலரால் கூறப்பட்டு வந்த சூழலில் நக்கீரன் இதழில் அது தொடர்பாக கட்டுரை வெளியானது. இதனால் அந்த இதழின் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் கோபாலை 124-ன் கீழ் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லை எனக்கூறி அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

கட்டுரை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டது பலரது கண்டனத்தை எழுப்பியது. மேலும், இந்த நடவடிக்கை மூலம் ஆளுநரின் மீதான சந்தேகம் வலுப்படுகிறது எனவும் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கமளித்துள்ளது. ராஜ் பவன் அளித்துள்ள விளக்கத்தில், ஆளுநர், ஆளுநர் செயலர்கள், ராஜ் பவன் ஊழியர்களுக்கும் நிர்மலா தேவிக்கும் எந்த தொடர்புமில்லை. உண்மைத்தன்மையை ஆராயமால் புலனாய்வு என்ற பெயரில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநரின் மதுரை பயணத்தின் போது அவரது செயலாளர் உடன் வரவில்லை. மதுரை விருந்தினர் மாளிகையில் ஆளுநர் தங்கவுமில்லை.

மஞ்சள் பத்திரிகை போன்ற செயலுக்கு மதிப்பிற்குரிய நபர்கள் ஆதரவளிப்பது வருத்தமளிக்கிறது. மதிப்பிற்குரிய அவர்கள் உண்மைத்தன்மையை அறிய வாய்ப்பில்லை. நிர்மலாதேவிக்கும் ஆளுநர் மாளிகைக்கும் துளியும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ளது.