நிர்மலாவின் அறிவிப்பில் பசியால் வாடும் ஏழை மக்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை- ப.சிதம்பரம்

 

நிர்மலாவின் அறிவிப்பில் பசியால் வாடும் ஏழை மக்களுக்கும், வெளிமாநில தொழிலாளர்களுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை- ப.சிதம்பரம்

பிரதமர் மோடி கூறியபடி, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத நிதியத்தின் ஆதரவுடன் 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு இணை இலவச கடன் திட்டம் வழங்கப்படும், அரசு இபிஎஃப் பங்களிப்புகளுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கியது பணப்புழக்கத்திற்கு உதவும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

Nirmala sitharaman

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள பொருளாதார மேம்பாடு குறித்த அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த ஒரு பலனும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார். பசியால் வாடி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கும், பல்வேறு மாநிலங்களில் இருந்து நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பி வரும் தொழிலாளார்களுக்கும் சிறிதும் உதவும் வகையில் இந்த நிதி அறிக்கை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும்  வகையில் மத்திய அரசின் அறிவிப்புகள் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.