நிர்பயா சம்பவத்தின்போது டெல்லியிலேயே இல்லை… தூக்குதண்டனை குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

 

நிர்பயா சம்பவத்தின்போது டெல்லியிலேயே இல்லை… தூக்குதண்டனை குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் குற்றவாளிகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து வருவதால் தண்டனை நிறைவேற்றபடவில்லைC quashes plea of convict Mukesh

டெல்லி நிர்பயா சம்பவம் நடந்தபோது டெல்லியிலேயே இல்லை என்று கூறி முகேஷ் தாக்கல் செய்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் குற்றவாளிகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து வருவதால் தண்டனை நிறைவேற்றபடவில்லை.

mukesh-nirbhaya-victim-09

இந்த நிலையில் குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதற்குள்ளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை குற்றவாளி முகேஷ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “நிர்பயா சம்பவம் நடந்தபோது நான் டெல்லியிலேயே இல்லை. தவறாக என்னை இந்த வழக்கில் சேர்த்துவிட்டார்கள். எனவே, வழக்கை மீண்டும் விசாரித்து விடுவிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், முகேஷின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.