நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசிய வழக்கறிஞர் ; ‘அவரையும் தூக்கி ஜெயிலில் போடுங்க.. !’ கொதித்த கங்கனா ரணாவத்

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசிய வழக்கறிஞர் ; ‘அவரையும் தூக்கி ஜெயிலில் போடுங்க.. !’ கொதித்த கங்கனா ரணாவத்

2012  டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடந்தேறிய அந்தக் கொடூரமான சம்பவம் நாட்டையே உலுக்கியெடுத்து.23 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் இறப்பிற்கு காரணமான இருந்த அந்த 4 கொடூரர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

nirbhaya

இவ்வளவு நாள் நடந்து வந்த நீதி மன்ற விசாரணையின் இறுதியில் அவர்களுக்கு தூக்கு  உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் கருணை மனு ஒன்றை விண்ணப்பித்திருந்தான். அதனை நீதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரிப்பு செய்துவிட்டார். பிப்ரவரி 1-ம் தேதி குற்றவாளிகளுக்கு  தூக்குத்  தண்டனை நிறைவேற்றப்படும் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 

jay

நிர்பயாவின் தாயார் அந்த குற்றவாளிகளை சோனியா காந்தி, தனது கணவரான ராஜிவ் காந்தியையை கொலை செய்தவர்களை மன்னித்தது போல மன்னித்துவிடலாம்’ என்று வழக்கறிஞர்  இந்திரா ஜெய்சிங் தெரிவித்த  கருத்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட  பெண் நிர்பயாவின் தாயாரும் இது குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.தற்போது   இந்திரா ஜெய்சிங் சொன்ன கருத்து குறித்து, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

gangana

அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ கொடூரமான பாதகச்  செயலைச்  செய்த அந்த 4 குற்றவாளிகளுடன் சேர்த்து இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடைக்கவேண்டும், இப்படிப்பட்ட பெண்கள் தான் இதுபோன்ற அரக்கர்களையும்,கொடூரர்களையும் பெற்றெடுகிறார்கள்’ என்று கங்கனா ரணாவத்  பொங்கித்தள்ள… அதற்கு, நிர்பயாவின் தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.