நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் போடும் மாதிரி சோதனை முடிந்தது! – திகார் சிறை நிர்வாகம் அறிவிப்பு

 

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் போடும் மாதிரி சோதனை முடிந்தது! – திகார் சிறை நிர்வாகம் அறிவிப்பு

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா மற்றும் அக்‌ஷய் கமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

டெல்லியில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் மாதிரி சோதனை இன்று காலை நடத்தப்பட்டது என்று டெல்லி திகார் சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். இரும்பு கம்யை உடலுக்குள் நுழைத்து மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிர்பயா உயிருக்கு போராடினார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நிர்பயா உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

nirbaya

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா மற்றும் அக்‌ஷய் கமார் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து மனுக்கள் மீது மனுக்களாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வரும் நிலையில் தூக்கு தண்டனை தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

delhi

வருகிற 20ம் தேதி காலை 5.30க்கு இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இந்த முறையாவது குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், டெல்லி திகார் சிறையில் டம்மியை தூக்கில் போடும் சோதனை நடத்தப்பட்டது. இன்று காலை நான்கு பேர் எடை கொண்ட உருவ பொம்மைகள் தூக்கில் போடப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற சிறை நிர்வாகம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.