நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது 3 வது முறையாக நிறுத்தி வைப்பு

 

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது 3 வது முறையாக நிறுத்தி வைப்பு

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கின் குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் அவரும் விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் படி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த டெத் வாரண்ட்டை ரத்து செய்யக் கோரி குற்றவாளிகளில் அக்சங் சிங் மற்றும் பவன் குமார் குப்தா என்பவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தொடரப் பட்டதின் நோக்கம், தூக்குத் தண்டனையை ஒத்திவைக்க வேண்டும் என்பதே என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி தர்மேந்திரர் ராணா தலைமையில் விசாரிக்கப்பட்டது. அதில், நிர்பயா கொலைக் குற்றவாளி பவன் குமாரின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளுக்கு நாளை காலை தூக்கிலிடப் படுவது உறுதி செய்யப்பட்டது. 

Nirbhaya Convicts

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கருணை மனுவை இன்று பிற்பகல் 12 மணிக்கு அனுப்பியிருந்தா. கருணை மனு மீது குடியரசுத்தலைவர் முடிவு எடுக்காததால் தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.