நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு! 

 

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு! 

2012- ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா  ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம்  உலக நாடுகளை அதிர வைத்தது. இதையடுத்து நிர்பயா சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடும் செயலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் அக்‌ஷய் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. அதில் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும், ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில்  நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் குடியரசுத்தலைவர் முகேஷ் சிங்கின் மனுவை உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் நிராகரித்தார். 

நிர்பயா குற்றவாளிகள்

குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பிப்.1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.