நிர்பயாவுக்காக போராடியவர்கள் இன்று அரசியல் விளையாட்டு ஆடுகிறார்கள்! – நிர்பயாவின் தாய் வேதனை

நிர்பயாவுக்காக போராடியவர்கள் இன்று அரசியல் விளையாட்டு ஆடுகிறார்கள்! – நிர்பயாவின் தாய் வேதனை

2012ம் ஆண்டு நிர்பயாவுக்காக சாலையில் இறங்கி போராடியவர்கள் இன்று அரசியல் லாபத்துக்காக அதை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடி வருகிறார்கள் என்ற நிர்பயாவின் அம்மா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

jyoti

2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிர் போகும் அளவுக்கு தாக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேருக்கு வருகிற 22ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. முகேஷ் சிங் என்பவர் மட்டும் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் இத்தனை ஆண்டுகள் உயிர்வாழ அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம்” என்று பேசியிருந்தார்.

aravind

முகேஷ் மனு தாக்கல் செய்திருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தள்ளிப்போகும் என்று கருதப்படுகிறது. இதனால் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் இதுநாள் வரை அரசியல் பேசியது இல்லை. 2012ம் ஆண்டு என்னுடைய மகளுக்காக யார் எல்லாம் சாலையில் இறங்கி போராடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது என் மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று கண்ணீர்விட்டுக் கூறினார்.