நிருபர் கேள்விக்கு அஜித்தை மறைமுகமாக சாடிய சித்தார்த்

 

நிருபர் கேள்விக்கு அஜித்தை மறைமுகமாக சாடிய சித்தார்த்

நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் சித்தார்த் கோபமாக பதிலளித்தது சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை: நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் சித்தார்த் கோபமாக பதிலளித்தது சலசலப்பு ஏற்பட்டது.

தி லயன் கிங் திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதில் தமிழ் பதிப்பில், சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த்தும், வில்லன் கதாபாத்திரத்திற்கு அரவிந்த்சாமியும் குரல் கொடுத்துள்ளனர். மேலும் ரோபோ சங்கர், சிங்கம்புலி உள்ளிட்டோரும் மற்ற மிருகங்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர். 

lion

இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிக்காக நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி, ரோபோ சங்கர், சிங்கம்புலி ஆகியோர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் ஒருவர், ‘ஒரு ஆங்கிலப்படத்துக்கு விளம்பரம் செய்ய அனைத்து நடிகர்களும் வருகிறீர்கள். ஆனால் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் தமிழ் படத்தின் புரொமோஷன் பணியில் நிறைய ஹீரோக்கள் வருவதில்லையே. அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டார்.

sid

இதனால் கோபமடைந்த சித்தார்த், ‘நான் நடிக்கும் எல்லாப் படத்திற்கும், விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தான் இருக்கிறேன். இந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது. யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க தவறிவிடுகிறீர்கள்’ என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோ அஜித். அவர் தான் எந்த புரொமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அப்போ சித்தார்த் மறைமுகமாக அஜித்தை குறிப்பிடுகிறாரா?