நிருபர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கவசம்… விமர்சனத்துக்குள்ளான சன் டி.வி

 

நிருபர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கவசம்… விமர்சனத்துக்குள்ளான சன் டி.வி

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதை எல்லாம் மிஞ்சும் வகையில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகத்திலும் பத்திரிக்கையாளாகள் மத்தியில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நிருபர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கவசம் வழங்கிய சன் டி.வி-யின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது அதை எல்லாம் மிஞ்சும் வகையில் பத்திரிகையாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தனியார் தொலைக்காட்சிகளின் சேவை தொடருமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. 

sun-tv-reporters

இந்த நிலையில் சன் டி.வி தன்னுடைய நிருபர்களுக்கு பாதுகாப்பு கருவியை வழங்கியுள்ளது. உடல் முழுக்க மூடப்பட்ட பாதுகாப்பு கருவியோடு அவர்கள் செய்தி சேகரிக்கச் செல்கின்றனர். ஆனால், நிருபருடன் செல்லும ஒளிப்பதிவாளருக்கு இந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை. வெறும் மாஸ்க் மட்டுமே அவருக்கான பாதுகாப்பு. நிருபருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருந்தால், அது கேமராமேனுக்கும் இருக்காதா? பேட்டி முடிந்த பிறகு இதை பாதுகாப்பு உடையோடுதான் நிருபரும் ஒளிப்பதிவாளரும் ஒன்றாக பயணிக்க வேண்டும். அப்போது கேமராமேனுக்கு கொரோனா பரவாதா… இது என்ன அறைகுறை வேலை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.