நிரம்பி வழிந்த மெல்போர்ன் மைதானம் – மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சாதனை

 

நிரம்பி வழிந்த மெல்போர்ன் மைதானம் – மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சாதனை

உலகளவில் அதிகம்பேர் நேரில் பார்த்த மகளிர் கிரிக்கெட் போட்டியாக நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சாதனை படைத்துள்ளது.

மெல்போர்ன்: உலகளவில் அதிகம்பேர் நேரில் பார்த்த மகளிர் கிரிக்கெட் போட்டியாக நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. முதன்முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்த நிலையில், நேற்று நடந்த இந்தப் போட்டியை மெல்போர்ன் மைதானத்தில் 86,174 பேர் நேரில் கண்டு ரசித்தனர். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் அதிகம் பேர் நேரில் பார்த்த பெண்கள் போட்டியாக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றிலேயே அதிகம்பேர் நேரில் பார்த்த மகளிர் கிரிக்கெட் போட்டி என்ற சாதனையையும் நேற்றைய மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி படைத்தது.