நிரம்பி வழிந்த உண்டியல்… 26 நாட்களில் வந்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

 

நிரம்பி வழிந்த உண்டியல்… 26 நாட்களில் வந்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஒவ்வொரு பூஜையும் சுமார் 20 நிமிடங்கள் நடக்கும் நிலையில் இதைக் காணப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். ஆண்டிக்கோலத்தில் மலைமீது நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ttn

இங்கு முருகனுக்கு  ஆறுகால  பூஜை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு பூஜையும் சுமார் 20 நிமிடங்கள் நடக்கும் நிலையில் இதைக் காணப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

ttn

இந்நிலையில் பழனி உண்டியலில் மார்கழி மாதத்தையொட்டி  26 நாட்களில் ஐந்து கோடியே எழுபது லட்சம் ரூபாய் காணிக்கையாக  வந்துள்ளது.  இதனால் கடந்த 2 நாட்களாக உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்ததில்,  5 கோடியே 70 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 890 கிராம் தங்கம்  இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.