நிரந்தர கழிவு தொகை உயருமா மத்திய பட்ஜெட்டில், எதிர்பார்ப்பில் சம்பளதாரர்கள்!

 

நிரந்தர கழிவு தொகை உயருமா மத்திய பட்ஜெட்டில், எதிர்பார்ப்பில் சம்பளதாரர்கள்!

அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் நிரந்தர கழிவு தொகை உயர்த்த வேண்டும் என்று மாத சம்பளதாரர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நிலையான அல்லது நிரந்தர கழிவு என்னன்னா, மாத சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரியை கணக்கீடும் போது, அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக செய்யும் தொகையை நிரந்தரமாக கணக்கீட்டு அதனை மொத்த வருமானத்தில் கழித்து கொள்வதே நிலையான கழிவு. 2004-05ம் நிதியாண்டு வரை நிலையான கழிவு நடைமுறையில் இருந்து வந்தது.

வருமான வரி கணக்கீடு

ஆனால் அதன்பிறகு நிலையான கழிவு நீக்கப்பட்டது. 80சி, 80டி என பல பிரிவுகளின் கீழ் விலக்கு வழங்கப்படுவதால், நிரந்தர கழிவு தேவையில்லை என மத்திய அரசு முடிவு அதனை நீக்கியது. இந்த நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மீண்டும் நிரந்தர கழிவை அறிமுகம் செய்தார். அதன்படி, மாத சம்பளதாரர்கள் தங்களது வருமானத்தில் நிரந்தர கழிவாக ரூ.40 ஆயிரத்தை கழித்து கணக்கு காட்டினார்கள். 

கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு தாக்கல் செய்த 2019-20ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிரந்தர கழிவு தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் வரும் 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் நிரந்தர கழிவு தொகையை உயர்த்த வேண்டும் என மாத சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். 

வரி

நிரந்தர கழிவு தொகை ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது காணாதா இன்னுமா வேணும்ன்னு நீங்க கேட்பது புரியுது. ஆனால் ஆலோசகர்கள் வருமானத்துடன் ஒப்பிட்டுபார்த்தால் சம்பளதாரர்களுக்கு நிரந்த கழிவு குறைவு. உதாரணத்துக்கு, கடந்த நிதியாண்டில் மாதசம்பளதாரர் ரூ.30 லட்சம் வருமானம் (2018-19) சம்பாதிக்கிறார் என்று வைத்து கொள்வோம். அதில் தொழில் வரி ரூ.2,400ம், நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்தையும் கழித்து விட்டால் அவரது மொத்த வருமானம் ரூ.29,57,600. இதில் 80சி-ன் கீழ் மேற்கொள்ளும் முதலீடு ரூ.1,50,000 மற்றும் 80டி-ன் கீழ் எடுக்கும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் ரூ.25 ஆயிரத்தை கழித்து விட்டு வார்த்தால்  மாத சம்பளதாரரின் வரிவிதிப்புக்குரிய வருவாய் ரூ.27,82,600ஆக இருக்கும். மாதசம்பளதாரர் இந்த வருவாய்க்கு செஸ் உள்பட வரியாக  ரூ.6,73,171 செலுத்த வேண்டும்.

இப்பம் ஆலோசகரின் ஆண்டு வருமானத்தையும் அதே ரூ.30 லட்சம் என்று வைத்து கொள்வோம். ஆனால் அந்த 30 லட்சமும் வரிவிதிப்புக்கு வராது. உத்தேச வரிவிதிப்பு திட்டத்தின்படி, ரூ.15 லட்சம் மட்டுமே வரிவிதிப்புக்குரிய வருவாயாக கருதப்படும். அதில்,80சி-ன் கீழ் மேற்கொள்ளும் முதலீடு ரூ.1,50,000 மற்றும் 80டி-ன் கீழ் எடுக்கும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் ரூ.25 ஆயிரத்தை கழித்து விட்டு பார்த்தால்  ஆலோசகரின் வரிவிதிப்புக்குரிய வருவாய் ரூ.13,25,000ஆக இருக்கும். ஆலோசகர் இந்த வருவாய்க்கு செஸ் உள்பட வரியாக  ரூ.2,18,400 மட்டும் செலுத்தினால் போதும்.

மாதசம்பளதாரர், ஆலோசகரின் ஆண்டு வருமானம் ஒரே தொகையாக இருந்தாலும், ஆலோசகர் செலுத்தும் வருமான வரியை காட்டிலும் 200 சதவீதம் அதிகமாக  சம்பளதாரர் வரி செலுத்துகிறார். அதனால்தான் எதிர்வரும் பட்ஜெட்டில் நிரந்தர கழிவுக்கான தொகையை உயர்த்த வேண்டும் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.