நியூயார்க்கில் நடுரோட்டில் நிர்வாணமாக குவிந்த மாடல் அழகிகள்!

 

நியூயார்க்கில் நடுரோட்டில் நிர்வாணமாக குவிந்த மாடல் அழகிகள்!

நியூயார்க்கிலுள்ள ரயில் நிலையம் ஒன்றின் முன் திடீரென ஏராளமான மாடல்கள் நிர்வாணமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நியூயார்க்கிலுள்ள ரயில் நிலையம் ஒன்றின் முன் திடீரென ஏராளமான மாடல்கள் நிர்வாணமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக ஊடகங்களில், ஆண், பெண்ணுக்கிடையே காட்டப்படும் ஒரு பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாடல் அழகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்ஹாட்டன் பகுதியில் அவர்கள் நிர்வாணமாக குவிந்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாண உடலை காட்டும் புகைப்படங்களுக்கு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்த போராட்டம் நடைபெற்றது.

பல கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை இந்த சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு இந்த தடை இடைஞ்சலாக இருப்பதாக கலைஞர்கள் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட மிகக்குறைவாக மறைக்கப்பட்ட மார்பகங்களைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ஏராளம் நிறைந்து கிடக்க, பெண்கள் தங்கள் மார்பகங்களை முழுமையாக காட்டுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பது ஏன் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். அதே நேரத்தில் ஆண்கள் தங்கள் மார்பகங்களை காட்டுவதற்கு தடையில்லை. இந்த பாகுபாட்டை எதிர்த்தே நிர்வாண மாடல்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். வித்தியாசம் வித்தியாசமாக, கூட்டம் கூட்டமாக, மாடல்களை நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் ஸ்பென்சர் டுனிக் என்ற புகைப்படக் கலைஞர் தலைமையில்தான் இந்த போராட்டம் நடைபெற்றது.