நியூயர் ரெசொல்யூஷன் பிறந்த கதை தெரியுமா?

 

நியூயர் ரெசொல்யூஷன் பிறந்த கதை தெரியுமா?

வருடத்தின் கடைசிக்கு வந்தாச்சு! இனிமே என்ன? நம்ம நியூயர் ரெசொல்யூஷன் தான்… இப்போதெல்லாம் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ரெசொல்யூஷன் எடுப்பதுண்டு

வருடத்தின் கடைசிக்கு வந்தாச்சு! இனிமே என்ன? நம்ம நியூயர் ரெசொல்யூஷன் தான்… இப்போதெல்லாம் ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்பதற்காகவே பலர் ரெசொல்யூஷன் எடுப்பதுண்டு

சரி ஓவ்வொரு ஆண்டும் ரெசொல்யூஷன் எடுக்குற நம்ம, முதலில் இந்த வார்த்தையையும், அதற்கான பழக்கவழக்க கண்டிபிடிச்சது யார்னும் தெரிஞ்சிக்கலாம். சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு பாபியலோனியர்கள் தான் இப்படி ஒரு ரெசொல்யூஷன் எடுப்பதை அறிமுகப்படுத்தினர். காலப்போக்கில் இது அனைவராலும் பின்பற்ற தொடங்கியது. 

new year

தாங்கள் கடந்த வருடம் வாங்கிய கடனை புதிய வருடத்தில் கட்டாயம் திருப்பி செலுத்த வேண்டும் என்பதற்காகவே பாபியலோனியர்கள் இத்தகைய ரெசொல்யூஷன் திட்டத்தை கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த கடனை அடைக்க ஏதாவது ஒரு வழி கிடைக்க வேண்டும் கடவுளே என பிரார்த்தனையும் செய்துகொண்டனர். இப்படி செய்தால் ஒவ்வொரு வருட தொடக்கத்திலும் கடன் நீங்கி, புதுவாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய ரெசொல்யூஷன் திட்டத்தை கையெலுத்தனர். 

calender

அந்த காலத்தில் புதிய வருடத்தை பாபியலோனியர்கள் மார்ச் மாதத்தில்தான் கொண்டாடினர். அவர்களின் கொண்டாட்டம் 11 நாட்கள் இருக்கும் என்றும், அந்த புத்தாண்டுக்கு அட்டிக்கு என்றும் பெயரிட்டிருந்தனர். அப்போது அந்நாட்டு அரசர்களுக்கு முடிசூட்டும் நிகழ்வு,புதுப்பித்தல் போன்றவற்றை செய்தனர். பிறகு,ரோமாபுரி அரசரான ஜூலியஸ் ஸீஸர் புதிய வருடத்தை ஜனவரி ஒன்றாம் தேதிக்கு மாற்றினார். அன்றிலிருந்து இன்று வரை புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதியே கொண்டாடப்படுகிறது.

julius

அனால் இப்போதைய தலைமுறைகள், எதற்காக நியூயர் ரெசொல்யூஷனை எடுக்கிறார்கள் என தெரியாமல்,  ஜிம்-க்கு சென்று ஸ்லிம் ஆகணும், வெயிட் போடணுமென அர்த்தமே இல்லாமல் சிலாகித்துவருகின்றனர்.