நியூசிலாந்து மற்றும் நைஜீரியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

 

நியூசிலாந்து மற்றும் நைஜீரியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது

சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தற்போது நியூசிலாந்து மற்றும் நைஜீரியா நாடுகளிலும் முதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்லாந்து: சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தற்போது நியூசிலாந்து மற்றும் நைஜீரியா நாடுகளிலும் முதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2788-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 44 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

இந்த நிலையில், சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தற்போது நியூசிலாந்து மற்றும் நைஜீரியா நாடுகளிலும் முதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இருந்து ஆக்லாந்துக்கு திரும்பிய பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக நியூசிலாந்து சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மிலன் நகரில் இருந்து நைஜீரியாவுக்கு பணி நிமித்தமாக திரும்பியபோது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதாக நைஜீரிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.