நியூசிலாந்து பிரதமர் திருமணம் செய்ய முடிவு?!..

 

நியூசிலாந்து பிரதமர் திருமணம் செய்ய முடிவு?!..

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா (38), அவரது காதலரான கிளார்க் கேபோர்ட் (41) இருவருக்கும் கடந்த வெள்ளி அன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக  பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆடர்னும் அவரது  நீண்ட நாள் காதலரான கிளார்க் கேபோர்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா (38), அவரது காதலரான கிளார்க் கேபோர்ட் (41) இருவருக்கும் கடந்த வெள்ளி அன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக  பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெசிண்டா, கிளார்க்கின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த ஜோடிக்கு நேவ் என்ற பெண் குழந்தை  ஒன்று இருக்கிறது.

jacinda

ஜெசிண்டா திருமணம் செய்துகொள்ள மாட்டார், அவர் தன்னை ஒரு பெண்ணியவாதியாக காட்டிக்கொள்பவர் என்ற கருத்து நிலவியது. பிரதமராக பணியாற்றும்போது குழந்தையை பிரசவித்த இரண்டாவது பெண்மணி இவர், முதல் நபர் பாகிஸ்தானின் பெனாசிர் பூட்டோ ஆவார்.

fasd

நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் தாக்குதலின் போது  இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ஜெசிண்டா நடந்துகொண்டது பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெகுவிரைவில் அவருக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.