நியூசிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – என்ன காரணம்?

 

நியூசிலாந்து தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல் – என்ன காரணம்?

இந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.

மும்பை:  இந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விலகியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அட்டகாசமாக இந்திய அணியை வென்றது. ஆனால் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட இந்திய அணி அடுத்தடுத்து இரு போட்டிகளிலும் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்திலும், நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி சாதனை படைத்தது.

dhawan / ttn

இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி புறப்படுகிறது. அந்நாட்டில் ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. அதற்காக இன்று பெங்களூருவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்திய அணி புறப்படுகிறது. சிங்கப்பூர் மார்க்கமாக நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். இவ்விரு அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டி வருகிற 24-ந்தேதி அங்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான். அந்த போட்டியில் தவான் பீல்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரால் தொடர்ந்து பீல்டிங்கும் செய்ய இயலவில்லை, பேட்டிங்கும் செய்யவில்லை. முன்னதாக தவானின் ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பொறுத்தே அவரது காயம் குறித்து தெரியவரும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.