நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்; 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்கள் நீக்கம்?

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்; 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்கள் நீக்கம்?

நியூசிலாந்து மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான வீடியோக்களை நீக்கி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

நியூசிலாந்து மசூதியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான வீடியோக்களை நீக்கி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாகினர், 40-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

newszealand criminal

இந்த கொடூர தாக்குதலில் ஈடுப்பட்ட குற்றவாளி பிரண்ட்டன் டர்ரண்ட், அதனை பேஸ்புக்கில் லைவ் ரிலே செய்தான். அதை லட்சக்கணக்கானோர் ஷேர் செய்தும், டவுண்லோட் செய்து தனியாக பதிவிட்டும் வந்தனர். இந்நிலையில் வன்முறையை தூண்டும் இந்த வீடியோ காட்சிகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருகிறது.

பேஸ்புக் அளித்துள்ள தகவலின்படி, சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் 15 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் கிராபிக் செய்யப்படாத வீடியோக்களையும் நீக்கி வருவதாக கூறப்படுகிறது.